பெங்களூர் கல்யாண மண்டபத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 பேர் பலி
பெங்களூர்: பெங்களூர் திருமண மண்டபத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து மண்டபம் இடிந்து விழுந்த சம்பவத்தில், சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இறந்தனர்.
பெங்களூர் சுமனஹல்லியில் உள்ள லக்ஷ்மி வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நேற்று மதியம் சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டர் ஒன்று வெடித்தது. இதனால் திருமண மண்டபம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
4 மாடிகளை கொண்டு திருமண மண்டபத்தில் வேகமாக பரவிய தீயை, தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் மண்டபத்தின் உள்ளே சென்றபோது, சிலிண்டர் வெடித்த அதிர்ச்சியில் நின்ற மண்டப சுவர்கள் இடிந்து விழுந்தது.
இதில் மண்டபவத்தின் அருகில் இருந்த வீடுகளின் மீது கட்டிட பாகங்கள் விழுந்து 12 பேர் காயமடைந்தனர். அதன்பின் நடத்திய மீட்பு பணியின் போது, அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கவிதா(17) என்பவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மீட்கப்பட்ட மற்றொரு உடல் எரிந்த நிலையில் உள்ளதால், யார் என்பதை கண்டறிய முடியவில்லை.
சிகிச்சை பெற்றுவரும் 12 பேரில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று திருமண மண்டபவத்தில் எந்த நிகழ்ச்சியும் நடக்காமல் இருந்ததால் பலியானோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறி்த்து விசாரணை நடந்து வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications