பேஸ்புக் மெசேஜ்: தற்கொலைக்கு தூண்டியதாக ஐஐஎம் மாணவியின் காதலன் மீது வழக்குப் பதிவு
பெங்களூர்: பேஸ்புக் மெசேஜை பார்த்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெங்களூர் ஐஐஎம் மாணவியின் பாய் பிரண்ட் மீது தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் மாலினி மர்மு(22). அவர் பெங்களூர் ஐஐஎம்-ல் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடைய பாய் பிரண்ட் பேஸ்புக்கில் மர்முவை பிரிவதாகவும், இதன் மூலம் தான் சுதந்திரமடைந்துவிட்டதாகவும் ஸ்டேடஸ் போட்டிருந்தாராம். இதைப் பார்த்த மர்முவுக்கு துக்கம் தாங்க முடியவில்லை. உடனே விடுதி அறையில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மாலினி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவருக்கும், அவரது பாய் பிரண்டுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. இதையடுத்து தான் அவர் பேஸ்புக்கி்ல் மாலினியைப் பிரிவதாகத் தெரிவித்துள்ளார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வழக்கில் மாலினியை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது பாய் பிரண்ட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். மாலினி தற்கொலை செய்து கொண்டதையடு்தது அந்த நபர் தனது பேஸ்புக் அக்கௌண்டை டிலீட் செய்துவிட்டார்.
ஒரு திறமையான மாணவியை இழந்துவிட்டோம் என்று ஐஐஎம் தலைவர் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications