மேலும் 2 நில அபகரிப்பு வழக்குகளில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கைது

திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் நேருவை திமுக களமிறக்கியுள்ள நிலையில் இந்த அடுக்கடுக்கான வழக்குகள் பாய்ந்துள்ளன.
ஏற்கனவே திருச்சியில் கலைஞர் அறிவாலயத்துக்கு இடம் வாங்கிய விவகாரம் தொடர்பாக நேரு கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீது மேலும் 2 வழக்குகள் பாய்ந்துள்ளன.
திருச்சி விமான நிலையத்துக்கு அருகே கொட்டப்பட்டில் நில அபகரிப்பு செய்ததாக ஒரு வழக்கும், சாத்தனூரில் நில அபகரிப்பு செய்ததாக இன்னொரு வழக்கும் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொட்டப்பட்டு வழக்கில் நேரு, அவரது தம்பி ராமஜெயம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சாத்தனூர் சாலமன் தந்த புகாரின் பேரில், அந்த வழக்கில், நேரு, ராமஜெயம் உள்பட 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் நேருவைக் கைது செய்த போலீஸார் அவரை கடலூர் சிறையிலிருந்து திருச்சி கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை அக்டோபர் 4ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications