மத்திய அரசு விற்ற துப்பாக்கியை ரூ. 4900க்கு வாங்கிய மாயாவதி
டெல்லி: பல்வேறு குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியை உ.பி. முதல்வர் மாயாவதி ரூ. 4900 கொடுத்து வாங்கியதாக ஆர்.டி.ஐ. தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகத்திடம் ஆர்.டிஐ மூலம் கேட்டிருந்தார் ஒருவர். அவருக்கு அளித்த பதிலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 1991ம் ஆண்டு ஆர்மீனியஸ் ரிவால்வர் வகை துப்பாக்கியை ரூ. 4900 கொடுத்து வாங்கினார் மாயாவதி. அதேபோல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி 0.32 ரக ரிவால்வரை ரூ. 1.45 லட்சம் கொடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார்.
முன்னாள் எம்.பி. ஆதிக் அகமது (35 கிரிமினல் வழக்குகள் இவர் மீது உள்ளன. இதில் பல கொலை வழக்குகள், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.) ரூ. 3.15 லட்சத்துக்கு ரக்கர் எ ம்-55 மார்க் 2 வகை துப்பாக்கியை வாங்கினார். இவர் சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்தவர்.
திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் கல்மாடி, ரூ. 9150க்கு வெப்லி ரிவால்வர் ஒன்றை வாங்கியுள்ளார்.
எம்.பிக்களுக்கு இந்த துப்பாக்கிகளை மத்திய அரசு சலுகை விலையில் விற்றுள்ளது. மேலும் இந்த ஆயுதங்களை பத்து வருடங்களுக்கு அவர்கள் யாருக்கும் விற்கக் கூடாது என்ற நிபந்தனையும் விதித்து விற்கப்பட்டுள்ளது. மொத்தம் 750 எம்.பிக்கள் இதுபோல பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை வாங்கியுள்ளதாகவும் நிதியமைச்சக தகவல் தெரிவிக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications