உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டி- முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் ஒத்த கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவோம் என மதிமுக முதலில் அறிவித்திருந்தது. ஆனால் மதிமுகவை கூட்டணி சேர்க்க பாமக முன்வரவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைக் கூட அது தனது கூட்டணியில் சேர்த்துக் கொள்ள முன்வரவில்லை.
இதையடுத்து மதிமுக தனித்துப் போட்டியிடும் என அதிரடியாக அறிவித்துள்ளார் வைகோ. மேலும் முதல் வேட்பாளர் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி சென்னை மாநகர மேயர் பதவிக்கு நா. மனோகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பாஸ்கர சேதுபதியும், கோவையில் அர்ஜூன ராஜும் போட்டியிடுகின்றனர்.
தூத்துக்குடி மேயர் பதவிக்கு பாத்திமா பாபு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கு பூங்கொடி சாமிநாதனும், திருப்பூர் மேயர் பதவிக்கு நாகராஜும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நகராட்சி வேட்பாளர்களையும் அறிவித்தார்
மேயர் வேட்பாளர்களைப் போல நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்களையும் வைகோ அறிவித்தார். அதன்படி அக்கட்சியின் பிரமுகர் சதன் திருமலைக்குமார் புளியங்குடி நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
திருச்சியில் போட்டியில்லை
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயக விரோதமாக அணுகியுள்ளது.
எஸ்.சி, எஸ்.டி மற்றும் பெண்களுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் சற்றேனும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடுகிறதா என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலளித்தார் வைகோ.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications