பாதாள சிறையி்ல் அடைத்து வைத்து 6 இளம்பெண்களை 2 ஆண்டுகளாக கற்பழித்த தீயணைப்பு வீரர்
பெய்ஜிங்: வீட்டிற்கு அடியில் அமைக்கப்பட்ட பாதாள சிறையில் 6 இளம்பெண்களை அடைத்து வைத்து 2 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களை கற்பழித்து வந்த தீயணைப்பு வீரர் போலீசாரிடம் சிக்கினார்.
சீன நாட்டின் ஹீனான் மாகாணத்தில் உள்ள லூயங் பகுதியை சேர்ந்தவர் லீ ஹாயோ(34). தீயணைப்பு வீரராக பணியாற்றி வந்த இவர் மனைவி மற்றும் மகன் ஆகியோர் உள்ளனர். இவரது வீட்டிற்கு அடியில் 1 வருடத்திற்கு மேலாக பாடுபட்டு, சுற்றுபுறத்தார் யாருக்கும் தெரியாமல் பாதாள அறை ஒன்றை உருவாக்கினார்.
தரையில் இருந்த 4 மீட்டர் ஆழத்தில், 30 சதுர மீட்டரில் உள்ள 2 அறைகளை கொண்டிருந்தது. இதற்கு 60 செ.மீ மட்டுமே அளவுள்ள குறுலான வழியை ஏற்படுத்தினர். பின்னர் தான் தனது திட்டத்தை அரங்கேற்றினார். தன்னோடு பழகும் பெண்களை மயக்கி வீட்டிற்கு கொண்டு வந்து அந்த பாதாள சிறையில் அடைத்து வைத்து கற்பழித்தார்.
இப்படி 6 பெண்களை கடத்தி வந்து அந்த அறைகளில் அடைத்து வைத்து அவ்வப்போது மாறி மாறி கற்பழித்து வந்தார். இப்படி கடந்த 2 ஆண்டுகளாக அந்த பாதாள சிறையில் கிடந்து, அந்த பெண்களின் மனநிலை பாதிக்கப்பட்டு, லீயிடம் இருந்து தப்பும் எண்ணமும் இல்லாமல் போனது. அவர்களும் லீயின் இஷ்டத்திற்கு தகுந்தவர்களாக மாறி போனார்கள்.
சிறையில் அடைக்கப்பட்ட பெண்களுக்கு 2 நாட்களுக்கு 1 முறை மட்டுமே உணவு அளித்து, அவர்கள் எப்போதும் களைப்பாக இருக்குமாறு லீ வைத்துள்ளார். இதன்மூலம் தனது பிடியில் இருந்து தப்ப முடியாதபடி பார்த்து கொண்டார்.
மேலும் தனக்கு பணம் தேவைப்படும் போது, அடைத்து வைக்கப்பட்ட பெண்களை வெளியே மற்ற இடங்களுக்கு கடத்தி சென்று விபச்சாரத்திலும் ஈடுபடுத்தி உள்ளார். விபச்சாரத்திற்காக ஒரு பெண்ணை வெளியே அனுப்பிய போது, லீயின் பிடியில் தப்பினர். வெளியே வந்து பாதாள சிறையில் தானும், தன்னுடன் அடைத்து வைக்கப்பட்ட பெண்களும் அனுபவித்த கொடுமைகளை போலீசாரிடம் கொட்டி தீர்த்துள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் லீயின் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது தான் லீயின் லீலைகளை கேள்விப்பட்ட அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் தன்னை கைது செய்ய வருவதை அறிந்து வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயன்ற லீயை கைது செய்தனர்.
லீயிடம் நடத்திய விசாரணையில் 2 பெண்களின் உடல்களை டங்ஷியாங் என்ற இடத்தில் இருந்து போலீசாரிடம் தோண்டி எடுத்தனர். இவை 1 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டது தெரிந்தது. கற்பழிக்கும் போது ஏற்பட்ட சண்டையில் அந்த பெண்களை லீ கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மற்ற பெண்களை மீட்ட போலீசார் அவர்களுக்கு தகுந்த மருத்துவமனை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து லீயிடம் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications