எங்களை நம்பி வந்த கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி: பாஜக

இது குறித்து தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிக்காக முயன்று கொண்டிருந்த நிலையில் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னரே பாஜக சட்டமன்ற தேர்தலை தனியாக சந்திப்பது என துணிச்சலாக முடிவெடுத்தது.
பிற கட்சிகள் கூட்டணிக்காக முண்டியடித்துக் கொண்டிருந்த நிலையில் பாஜக கூட்டணியை பற்றி கவலை கொள்ளாமல் தேர்தலை எதிர்கொண்டது. அன்றைய ஆளும் கட்சியான தி.மு.கவிற்கு எதிரான மாபெரும் அலைவீசிய நேரத்திலும் பாஜக கெளரவமான வாக்குகளை பெற்றது.
நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக தனித்து போட்டியிடுவது என்று ஆரம்பத்திலேயே அறிவித்திருந்தது. அதே நேரம் பாஜகவின் நிலைபாட்டை ஏற்றுக் கொண்டு பாஜகவை கூட்டணிக்காக அணுகி வரும் கட்சிகளோடு உறவு கொள்ள தயங்க மாட்டோம் என்பதையும் அறிவித்திருந்தது.
பாஜகவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைத்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தங்கள் விருப்பத்தை தெரிவித்தது. கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஈஸ்வரன் கூட்டணி குறித்து பேச அமைத்த 'சக்தி கோச்' நடராஜன், பாலசுப்பிரமணியன், நாகராஜ் ஆகியோரை கொண்ட குழு சந்தித்து கூட்டணிக்கான தங்கள் விருப்பத்தை தெரியப்படுத்தி அதற்கான கடிதத்தை வழங்கி உள்ளனர்.
பாஜகவை முழுமையாக நம்பி கூட்டணி வைத்துக் கொள்ள முன் வந்துள்ள கொங்கு நாடு முன்னேற்ற கழகத்திற்கு பாராட்டுக்களை தெரியப்படுத்திக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்று நாமக்கல், கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை , உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி , சூலூர், பல்லடம் ஆகிய இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோற்றது நினைவுகூறத்தக்கது.
-
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications