2 மீனவர்கள் மாயமான வழக்கில் முன்னாள் அமைச்சர் கேபிபி சாமி கைது

கடந்த 2006ம் ஆண்டு திருவொற்றியூரைச் சேர்ந்த செல்லத்துரை மற்றும் இன்னொரு மீனவர் மாயானார்கள். இவர்களில் செல்லத்துரை கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருவொற்றியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். திமுக ஆட்சிக்காலத்தில் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தது.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கு மீண்டும் முடுக்கி விடப்பட்டது. இந்த வழக்கில், சாமியின் தம்பிகளான கே.பி.பி. சங்கர் மற்றும் கே.பி.பி.சொக்கலிங்கம் ஆகிய இருவரும் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் சில வாரங்களுக்கு முன்பு சரணடைந்தனர்.
இந்த வழக்கில் டைசன், சுந்தரம் உள்ளிட்ட மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வழக்கில் கே.பி.பி.சாமியும் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவரைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர்.
இந்தப் பின்னணியில் இன்று காலையில் சாமியின் வீட்டின் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டனர். அவரைக் கைது செய்ய போலீஸார் குவிந்ததை அறிந்த திமுகவினர் பெருமளவில் வீடு முன்பு திரண்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களைப் போலீஸார் கலைத்து விரட்டினர்.
பின்னர் சாமியைப் போலீஸார் கைது செய்தனர். அதிமுக அரசில் கைது செய்யப்பட்டும் லேட்டஸ்ட் திமுக மாஜி அமைச்சர் சாமி என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications