திருநங்கையருக்கு விரும்பும் வார்டில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருநங்கையர் தாங்கள் விரும்பும் வார்டில் உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடலாம் என தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருநங்கையர்களும் தங்கள் அடிப்படை உரிமைகளை பயன்படுத்தி தேர்தல்களில் வேட்பாளர்களாக போட்டியிட்டு வருகின்றனர்.
நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திருநங்கையர் எந்த பதவிக்கும், எங்கும் போட்டியிடலாம். ஆனால், ஆதிதிராவிடர், பழங்குடியினர் பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு போட்டியிடும் திருநங்கையரும் அந்த பிரிவினராக இருக்க வேண்டும்.
தேர்தலில் போட்டியிடும் திருநங்கையருக்கு பாலினம் பதிவு செய்வதை தவிர்த்து விடலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications