அதிமுக,திமுக, பாமக,மதிமுக தீவிரவாதத்திற்குத் துணை போகின்றனவாம்-சொல்கிறார் ஈவிகேஎஸ்

Subscribe to Oneindia Tamil

EVKS Elangovan
ஈரோடு: திமுக, அதிமுக, பாமக, மதிமுக,இடதுசாரிகள் என தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளுமே தீவிரவாதத்திற்குத் துணை போவதாக பேசியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார்.

இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தமிழ்நாட்டில் 1967 ம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும், காங்கிரஸ் கட்சிக்கு என்று குறிப்பிட்ட சதவீத வாக்கு உள்ளது. இந்த வாக்குகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும்.

அதுமட்டுமின்றி உள்ளாட்சியில் லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்றால் அது காங்கிரஸ் கட்சியால் மட்டும்தான் முடியும் என்ற கருத்து கிராமப்புற மக்கள் மட்டுமின்றி பெரும்பாலான நகர்ப்புற மக்களிடமும் உண்டு. எனவே இந்த தேர்தலில் காங்கிரசார் மகிழ்ச்சியுடன் போட்டியிடுகிறோம்.

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி மத்திய அரசின் சாதனைகளையும், தமிழக மக்களுக்கு மத்திய அரசு வழங்கி இருக்கும் நலத்திட்டங்களையும் எடுத்துக் கூறுவோம்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் தொண்டர்கள், இளைஞர் காங்கிரசாரின் நீண்டநாள் கோரிக்கையின் படி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று சோனியாகாந்தி முடிவு எடுத்து அறிவித்து உள்ளார்.

வருகின்ற காலங்களிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்றே விரும்புகிறோம். உள்ளாட்சி தேர்தலில் ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு பிரசாரம் செய்ய வருவதாக உள்ளது. அப்போது ஈரோட்டுக்கும் அவரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த தேர்தல் பிரசாரம் என்பது தீவிரவாதத்துக்கு எதிரான பிரசாரமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சிகளும் தீவிரவாதத்துக்கான துணைபோகின்ற கட்சிகளாகவே உள்ளன. எனவே தீவிரவாதம் என்ற கொடியசெயலை காங்கிரஸ் கட்சி எப்போதும் எதிர்க்கும். தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று பேசினார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+