வேகமாக வளர்ந்து வருகிறது இந்திய பொருளாதாரம்: ஐ.நா.வில் பிரதமர் பேச்சு

ஐ. நா. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் பிரதமர் மன்மோகன் சிங்.
அப்போது அவர் பேசுகையில்,
வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவால் உலக பொருளாதாரத்தின் எல்லைகளை விரிவுபடுத்த முடியும். வளர்ந்து வரும் நாடுகளுக்கு முதலீடு, தொழில்நுட்பம், பொருட்களை விற்பனை செய்ய சந்தை தேவை. உலக பொருளாதாரம் சரிந்தாலும், இந்திய பொருளாதாரம் சுமார் 8 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. சீனாவை அடுத்து வேகமாக வளர்ந்து வருவது இந்தியா தான்.
உலக பொருளாதாரம் மந்தமாக இருக்கிறது என்பதற்காக நம்மை பாதுகாப்பதற்கு நம்மைச் சுற்றி ஒரு சுவரை எழுப்பிக் கொள்ளக்கூடாது. கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்தே இன்னும் முழுமையாக மீளவில்லை. பல வகைகளில் அந்த பிரச்சனை மேலும் அதிகரித்துள்ளது.
உலக பொருளாதாரம் ஆபத்தில் இருக்கிறது என்பதற்காக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் உலக நிதி மற்றும் முதலீட்டு சந்தைகளில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனால் வளர்ந்து வரும் நாடுகளுக்குத் தான் பிரச்சனை ஏற்படும்.
இன்னும் உலகம் முழுவதும் கோடிக் கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்றனர். அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ள உலக பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளால் அந்த ஏழை மக்களின் வாழ்வு தான் மோசமடைந்துள்ளது.
கடந்த சில தலைமுறைகளாக கோடிக்கணக்கான மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டுள்ளோம். எங்கள் மக்களுக்கு சிறப்பாக உணவளித்து, கல்வி கொடுத்து, அவர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறோம். இருப்பினும் நாங்கள் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.
தீவிரவாத தாக்குதல்களில் பல அப்பாவி மக்கள் பலியாகினர். தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட ஒரு குறிப்பிட்ட முறையைப் பின்பற்றினால் போதாது. பல வழிகளில் தான் போராட வேண்டியுள்ளது. அமைதியான சூழல் இருந்தால் தான் வளர்ந்து வரும் நாடுகளால் வளர்ச்சி அடைய முடியும்.
முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிபர் ரப்பானி கொல்லப்பட்டது தீவிரவாதிகள் பல வழிகளில் தாக்குதல் நடத்தி அமைதியை சீர்குழைக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறது.
ஆப்கானிஸ்தான் மக்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய இந்தியா உதவும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications