10 வருடத்தில் 15 பெண்களை மணந்து மோசடி செய்த பலே ஆசாமி கைது
திருவனந்தபுரம்: பத்திரிக்கைகளில் மணப்பெண் தேவை என விளம்பரம் செய்து கடந்த 10 ஆண்டுகளில் 15 பேரை ஏமாற்றி திருமணம் செய்து பணம், நகை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வல்லபுழா பகுதியை சேர்ந்தவர் மஜீத். 10 ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு 3 குழந்தைகள் பிறந்தன.
6 மாத குடித்தனம்-அப்புறம் அடுத்த கல்யாணம்
பிறகு முதல் மனைவிக்கு தெரியாமல் பத்திரிகைகளில் மணப்பெண் தேவை என விளம்பரம் கொடுத்து மோசடி வேலையை தொடங்கினார். விளம்பரத்தில் தான் ஒரு அனாதை என்றும், தனக்கு உறவினர்கள் யாரும் கிடையாது என்றும் குறிப்பிடுவார். பிறகு தனது நண்பர்கள் சிலருடன் பெண் பார்க்க செல்லும் மஜித் திருமணம் ஆன பிறகு அந்த பெண்ணுடன் 6 மாதம் குடித்தனம் நடத்துவார்.
பின்னர் அங்கிருந்து நைசாக நழுவும் அவர் மீண்டும் பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்து அடுத்த பெண்ணை தேடுவார். இப்படியாக பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களை சேர்ந்த 15 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றை வரதட்சனையாக பெற்று மோசடி செய்துள்ளார்.
கோட்டக்கல் போலீஸில் சிக்கினார்
மஜித்திடம் ஏமாந்த மலப்புரம் எடரிக்கோடு பகுதியை சேர்ந்த கதீஜா என்ற பெண் கோட்டக்கல் போலீசில் புகார் கொடுத்தார். விசாரணை நடத்திய போலீசார் மஜித்தை கைது செய்து விசாரணை நடத்தியபோது இந்த தகவல்கள் வெளியாகின.
16 வயதுப் பெண்ணை மணக்க முயற்சித்தபோது கைது
16வது பெண்ணை ஏமாற்ற பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார். மஜீத் ஏமாற்றிய பெண்களின் விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications