அதிகாலை 2 மணிக்கு கைதான திமுக பிரமுகர் மாலை வரை வேனில் அலைக்கழிப்பு!
திண்டுக்கல்: அதிகாலை 2 மணிக்குக் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகரை வேனிலேயே வைத்து மாலை வரை போலீஸார் அலைக்கழித்ததாக புகார் கிளம்பியுள்ளது. போலீஸாரின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் திமுக ஒன்றியச் செயலாளராக இருப்பவர் ஜோதீஸ்வரன். இவர் மீது போலீஸார் கொலை மிரட்டல் விடுத்தது, எம்.ஜி.ஆர், முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது படங்களை உடைத்தது உள்ளிட்ட புகார்களின் பேரில் வழக்குப் பதிவு செய்து இன்று அதிகாலை 2 மணிக்குக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜோதீஸ்வரன் பின்னர் காலை 9.30 மணிக்கு மாஜிஸ்திரேட் முன்பு நிறுத்தப்பட்டார். அவரை திண்டுக்கல் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஜோதீஸ்வரனை வேனில் ஏற்றிய போலீஸார் திண்டுக்கல் சிறைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் பின்னர்அங்கு இடம் இல்லை என்று கூறி மதுரைக்கு அழைத்துச் சென்றனர். மதுரை மத்திய சிறைக்குச் சென்ற போலீஸார் அங்கும் இடமில்லை என்று கூறி மீண்டும் திண்டுக்கல் சிறைக்கே வந்து சேர்ந்தனர். காலையிலிருந்து மாலை வரை ஜோதீஸ்வரனை வேனிலேயே வைத்து அலைக்கழித்துள்ளனர் போலீஸார்.
இந்த செயலால் ஜோதீஸ்வரன் குடும்பத்தினர், அவர் எங்கு அடைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியாமல் பெரும் தவிப்புக்குள்ளாகினர். போலீஸார் வேண்டும் என்றே இப்படி அலைக்கழித்து ஜோதீஸ்வரனை பீதியூட்டியுள்ளனர் என்று திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications