கேரளாவில் அதிகளவு மது அருந்தி நினைவிழந்த 3 பேர் பலி
கொல்லம்: கேரளாவில் அளவிற்கு அதிகமாக குடித்துவிட்டு போதையில் சாலையில் விழுந்து கிடந்த 3 பேர் இறந்த நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டனர்.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடப்பா பகுதியை சேர்ந்த ஷாஜி (47) நேற்று காலையில் அளவிற்கு அதிகமாக குடித்துவிட்டு, அவரது வீட்டின் அருகே உள்ள சாலையில் விழுந்து கிடந்தார். அதுகுறித்து அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் மாலை வரை அசைவற்று கிடந்த ஷாஜியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் பல மணிநேரத்திற்கு முன்பு, இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதேபோல ஆஞ்சிலிமூடு பவுலோஸ் (50) மற்றும் கிளிகோல்லூர் சாரீப் (40) ஆகியோரும் அதிகளவில் குடித்துவிட்டு, சலனமற்ற நிலையில் மீட்கப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கொல்லம் மாவட்டத்தில் ஆங்காங்கே கள்ள சாராயம் விற்கப்படுகிறது. போலீசார் அவ்வப்போது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டாலும், சாராய விற்பனை குறைந்தபாடில்லை. இந்நிலையில் இறந்த 3 பேரும் கள்ள சாராயம் குடித்து இறந்தார்களா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
3 பேரின் உடல்களையும் பிரேத பிரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அதிகளவு மது அருத்தி இறந்ததாக வழக்கு பதிந்துள்ள போலீசார், 3 பேரின் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்தியாவில் குடிபோதைக்கு அடிமையானவர்கள் கேரளாவில்தான் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications