அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி முறிந்தது-உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி- தா.பாண்டிய

மேலும் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலையும் அவர் இன்று வெளியிட்டார்.
அதிமுகவில் கேட்ட இடமும் மரியாதையும் கிடைக்காததால், தனது அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டு தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துவிட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால், அந்தக் கட்சியின் முக்கியமான இணைக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் அதிமுகவிடம் தொடர்நது சீட் கேட்டு பேச்சு நடத்திக் கொண்டிருந்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் குழு அதிமுகவுடன் பேச்சு நடத்தி வந்தது. ஆனால் உடன்பாடு தான் ஏற்பட்டவில்லை. காரணம், 2006 உள்ளாட்சி தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்ற இடங்களை ஒதுக்கக்கூட அதிமுக தலைமை மறுத்துவிட்டது. ஆனாலும் அதிமுகவுடன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தது இந்திய கம்யூனிஸ்ட்.
இத்தனைக்கும் தேமுதிக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு வருமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மார்க்சிஸ்ட் மாநிலத் தலைவர்கள் பத்திரிக்கைகள் மூலம் அழைப்பும் விடுத்துப் பார்த்துவிட்டனர்.
முன்னதாக தனிப்பட்ட முறையில் இந்திய கம்யூனிஸ்டிடம் மார்க்சிஸ்ட் தலைவர்கள், தேமுதிக கூட்டணிக்குப் போகலாம் என்று கூறியும் கூட தா.பாண்டியன் அதை ஏற்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்தே, ''எங்கள் அணியில் சேருமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுக்கிறோம். நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு காரணம் அ.தி.மு.க. தலைமையின் தவறான அணுகுமுறைதான்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பத்திரிக்கைள் மூலம் தா.பாண்டியனுக்கு அழைப்பு விடுக்க நேர்ந்தது என்கிறார்கள்.
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அழைப்பையும் கூட நிராகரித்துவிட்டு அதிமுகவுடன் எப்படியாவது கூட்டணி வைத்துவிடலாம் என இந்திய கம்யூனிஸ்ட் முயன்றது. இவ்வளவு தூரம் இறங்கி வந்தாலாவது அதிக சீட் தருவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் எதிர்பார்த்தது.
ஆனால், அதிமுக தருவதாகச் சொன்ன இடங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை கொதிப்படைய வைத்துவிட்டது. இதையடுத்து இன்று காலை சென்னையில் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் நடந்தது.
அதில் அதிமுக கூட்டணியே கூடாது என்று பெரும்பாலானவர்கள் திட்டவட்டமாகக் கூறிவிடவே, தனித்துப் போட்டி என்ற அறிவிப்பை தா.பாண்டியன் வெளியிட்டார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications