வாக்காளர்களுக்கு மது விருந்து நடத்தினால் குண்டர் சட்டம்: மதுரை கலெக்டர் எச்சரிக்கை
மதுரை: வாக்காளர்களை கவரும் வகையில் மது உள்ளிட்ட விருந்து நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சகாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் சகாயம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, உள்ளாட்சி தேர்தலில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்ய வேண்டும். அதற்கான பணிகள் சட்டபூர்வமாக நடைபெற்று வருகின்றன.
ஆனால், ஒரு சில இடங்களில் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட கூட்டம் நடைபெற்றதாக தகவல் வருகிறது. பாரபட்சமற்ற வெளிப்படையான தேர்தல் நடைமுறைகளை பாதிக்க செய்யும் இது போன்ற ஏலத்தை நடத்துவதோ, இதில் பங்கு பெறுவதோ, தூண்டுவதோ சட்டப்படி குற்றமாகும்.
வாக்காளர்களை கவருவதற்காக பொது விருந்து, மது விருந்து ஆகியவை நடத்துவதும் குற்றமாகும். இந்த மாதிரியான நடவடிக்கைகள் தகவல்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர், மக்கள் நல பணியாளர்கள் மற்றும் ஊராட்சி உதவியாளர்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவி்த்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications