ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது மாநில தேர்தல் ஆணையம்: மு.க.அழகிரி
மதுரை: தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில், மாநில தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படும் என சந்தேகிப்பதாக, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மேயர் பதவிக்காக தி.மு.க. தரப்பில் பி.பாக்கியநாதன் வேட்புமனு தாக்குதல் செய்தார்.
அப்போது, மத்திய உரம் மற்றும் வேதிப் பொருள் துறை அமைச்சர் மு.க.அழகிரியும் உடன் இருந்தார். வேட்புமனு தாக்கல் செய்த பின், மத்திய அமைச்சர் அழகிரி கூறியதாவது, ஆளுங்கட்சியினர் எழுதியுள்ள சுவர் விளம்பரங்கள் குறித்து, மாநில தேர்தல் ஆணையத்திற்கு பலமுறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை.
புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு நிறுத்தியுள்ளனர். அ.தி.மு.க வேட்பாளர் வி.வி.ராஜன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போது, தேர்தல் விதிமுறை நடந்தது குறித்து, செய்தித்தாளில் கூட செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையான முறையில் நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே செயல்படும், என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications