பிலிப்பைன்ஸ்சில் புயல்- மழை: 18 பேர் பலி, 35 பேர் மாயம்
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் பேய் மழையால் இதுவரை 18 வரை பலியாகி உள்ளனர். 35 பேரை காணவில்லை.
பசிபிக் கடலில் ஏற்பட்ட புயல், பிலிப்பைன்ஸ் நாட்டின் நெசாட் பகுதியை கடுமையாக தாக்கியுள்ளது. 120 கி.மீ. வேகத்தில் தரையை கடந்த புயல் மணிலா விரிகுடா பகுதியின் சுற்றுபுறங்களில் கடும் பொருட்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. புயலால் ஏற்பட்ட மழையால், பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள பெரும்பாலான அணைக்கட்டுகள் நிரம்பி உள்ளன.
இதனால் மணிலா பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக லூசன் நகரில் 10 லட்சத்திற்கு மேற்பட்டோர் இருளில் தவித்தனர். சீரமைப்பு பணியில் துரித மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
லூசன் நகரில் ஏற்பட்ட நிலஅதிர்வு, வெள்ளத்தால், 60க்கும் மேற்பட்ட சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகம், மணிலா ஒசன் பார்க் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மணிலாவின் கடற்கரையில் இருந்த நட்சத்திர ஹோட்டல் மீது கடல் அலை பெரிய அளவில் தாக்கியதில், கடல்நீர் ஹோட்டலுக்குள் புகுந்தது.
ஹோட்டலில் தங்கியிருந்த 4,000க்கும் மேற்பட்டவர்களில் 60 சதவீதம் மக்கள் பாதுக்காப்பாக இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிலரை காணாவில்லை. இந்த புயலில் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 35க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
இதுகுறித்து, லூசன் நகர மேயர் அல்பிரிடோ லிம் கூறியதாவது, பெரிய அளவிலான அலைகள் மணிலா பகுதியை தாக்கியுள்ளது. இது போன்ற வெள்ளம் இப்பகுதி இதற்கு முன் ஏற்பட்டதாக தெரியவில்லை, என்றார்.
இந்நிலையில் நெசாட் பகுதியை இந்த வாரத்தில் மற்றொரு புயல் தாக்க இருப்பதாக எச்சரித்து உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட புயலில் 200க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications