நேபாள விமான விபத்தில் நேபாளத்தில் பலியான 8 பேரின் உடல்களுக்கு திருச்சியில் கண்ணீர் அஞ்சலி
திருச்சி : நேபாள விமான விபத்தில் பலியான 8 பேரின் உடல்கள் திருச்சி கொண்டு வரப்பட்டன. தேசியப் பள்ளியில் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் அவை அவரவர் சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நேபாளத் தலைநகர் காத்மாண்டு அருகே நடந்த விமான விபத்தில் திருச்சியைச் சேர்ந்த 8 பேர் உள்பட 19 பேர் பலியானார்கள். விமான விபத்தில் உயிரிழந்த 8 தமிழர்களின் உடல்களையும் திருச்சி கொண்டு வர தமிழக அரசு விரைவான நடவடிக்கையை எடுத்தது. திருச்சி எம்.பி. ப. குமாரை நேபாளத்திற்கே அனுப்பி வைத்து உடல்களை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டார் முதல்வர் ஜெயலலிதா.
அதேபோல திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். இதன் காரணமாக எட்டு பேரின் உடல்களும் விரைவாக திருச்சி கொண்டு வர நேரிட்டது. இன்று காலை 8 பேரின் உடல்களும் திருச்சி வந்து சேர்ந்தன.
விமான நிலையத்திலிருந்து உடல்களை தேசியப் பள்ளிக்குக் கொண்டு சென்றனர். அங்குள்ள மைதானத்தில் எட்டு பேரின் உடல்களும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பொதுமக்கள், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருப்போர் என பல்வேறு தரப்பையும் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.
அஞ்சலிக்குப் பின்னர் 8 பேரின் உடல்களும் அவரவர் சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இவர்களில் 7 பேரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுகின்றன. கனகசபேசன் என்பவரின் இறுதிச் சடங்கு மட்டும் அமெரிக்காவிலிருந்து அவரது மகன் திரும்பிய பின்னர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications