திருச்சி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் மனச்சாட்சியைக் காட்டுவர்- ஈ.வி.கே.எஸ்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதை காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

நாங்கள் தனித்துப் போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்பு நன்றாகவே உள்ளது. தனித்துப் போட்டியிடுவதால், காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதன்மூலம் சொந்தக்காலில் நிற்கிறோம், சுய மரியாதையைக் காத்துக் கொண்டுள்ளோம்.

ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்தியமைச்சர் வாசன் மற்றும் கட்சியின் முன்னணித் தலைவர்கள் வரவுள்ளனர்.

தேமுதிக அவர்களுக்கான பாதையை வகுத்து கொண்டு சென்று விட்டார்கள், அவர்களுடன் கூட்டணி என்பது முடிந்துபோன விஷயம். விஜய்காந்த் எங்களோடு வரவில்லையென்று எங்களுக்கு வருத்தம் ஏதும் இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றிரண்டு இடத்தில் ஜெயிப்பார்கள். மற்ற இடங்களில் டெபாசிட்கூட கிடைக்காது. தனியாக போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூட டெபாஸிட் வாங்க முடியாது என்பதால் தான் அவர்கள், தேமுதிகவுடன் சேர்ந்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீதான பிரச்சனை, எதிர்கட்சிகளால் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு கிளப்பப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி, ராஜா உள்பட யாரையும் பழிவாங்கும் நடவடிக்கையில் சிபிஐ ஈடுபடவில்லை. இந்த விஷயத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசுவதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ள கூடாது.

நாள்தோறும் அவருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வருவதால், எதைப் பேசுகிறோம் என்று அவருக்கே தெரிவதில்லை. அதனால் அவர் கூறுவதெற்கெல்லாம் பதிலளிக்கத் தேவையில்லை.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரமே இல்லாமல் போய்விட்டது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராஜீவ்காந்தி கொண்டு வந்த பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும்.

மேலும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தூய்மையான நிர்வாகம் இருக்கும். இந்த தேர்தலில் இளைஞர் காங்கிரசாருக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த சதவீதத்தை விட கூடுதலாக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில், 10 ஆண்டுகளாகத் தான் ஆளுங்கட்சியினரே வெற்றிபெறுவர் என்ற நிலை உருவாக்கப்பட்டது. திமுக ஆட்சியில் நடந்ததுபோல் இல்லாமல் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற வேண்டும். இம்முறை மாநிலத் தேர்தல் கமிஷனர் அய்யர் மற்றும் அதிமுக அரசு தேர்தல் நடுநிலையோடு நடத்தப்படுமென அறிவித்துள்ளனர். இதை நாங்கள் நம்புகிறோம்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மூன்று பேரின் தூக்கு தண்டனையை விவகாரத்தில் என்னுடன் விவாதிக்க வருமாறு கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தேன். அவருடன் விவாதிக்கும் அளவுக்கு எனக்கு தகுதியில்லையென அவர் கருதினால், அவரது வாரிசுகளில் யாரையாவது அனுப்ப கூறினேன். ஆனால், இதுவரை அதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால் எனக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லையென்று தான் எடுத்துக் கொள்வேன் என்றார்.

திருச்சி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை காங்கிரஸ் ஆதாரிக்குமா? என்று கேட்டதற்கு, காங்கிரஸ் கட்சியினர் மனச்சாட்சிப்படி நடந்து கொள்வார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+