அணுசக்தி மின்சாரம் தேவை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட முடியாது- பிரதமர் சூசகம்
டெல்லி: இந்தியாவுக்கு அணுமின் சக்தி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் தேவை. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளன என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இடிந்தகரையில் கடந்த 11 -ம் தேதி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். முதலில் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று கூறிய தமிழக முதல்வர் ஜெயலலிதா பின்னர் போராட்டம் தீவிரம் அடைவதை உணர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
முன்னதாக மத்திய அரசுடன் கூடங்குளம் விவகாரம் குறித்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்டக்காரர்களை சந்தித்து பேச மத்திய அரசின் சார்பில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி இடிந்தகரை வந்தார். அவர் வருகைக்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஐ. நா. பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்ற பிரதமர் கடந்த செவ்வாய்கிழமை நாடு திரும்பினார். இதயைடுத்து நாராயணசாமி நேற்று பிரதமரை சந்தித்து கூடங்குளம் விவகாரம் குறித்து பேசினார். தான் இடிந்தகரை சென்று அங்குள்ள மக்களை சந்தித்து பேசியது பற்றியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியது பற்றியும் பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.
அவர் கூறிய விவரங்களை கேட்ட பிரதமர் கூறியதாக நாராயணசாமி தெரிவித்ததாவது,
கூடங்குளம் விவகாரம் குறித்து பிரதமரிடம் விளக்கினேன். நிலக்கரி, தண்ணீர் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தால் நாட்டில் நிலவும் மின்தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாது. எனவே, அணுசக்தி மின்சாரமும் நாட்டுக்கு தேவை. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளன என்று பிரதமர் தெரிவித்தார் என்றார்.
இந்த விவகாரம் குறித்து பிரதமரை சந்தித்துப் பேச தமிழக நிதியமைச்சர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு டெல்லி வரவிருப்பதையும் அவர் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications