வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் உரிய இழப்பீடு தர வேண்டும்- சிபிஎம்
சென்னை: வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் தமிழக அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாலர் ஜி.ராமகிருஷ்ணன் கோரியுள்ளார்.
வாச்சாத்தி தீர்ப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வாச்சாத்தி பாலியல் பலாத்கார வழக்கில் தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்கிறது.
19 ஆண்டுகள் நியாயத்துக்காக விடாப்பிடியாக போராடிய வாச்சாத்தி கிராம மக்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக நின்று போராடிய தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்துக்கும் எங்கள் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாச்சாத்தியில் அரசுத் துறையினரால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான மலை கிராம மக்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய இழப்பீட்டை காலதாமப்படுத்தாமல் உடனடியாக கிடைத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
வாச்சாத்தியில் நடந்த பாலியல் அட்டூழியத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு அந்த மக்களுக்கு நீதி கிடைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு வழிகளில் தீவிரமாக போராடி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications