சத்பாவனா உண்ணாவிரதம்: ஊடகங்கள் கண்டதும், காணாததும்

இந்த மாத துவக்கத்தில் ஜகியா ஜாப்ரி வழக்கில் தீர்ப்பு வந்ததையடுத்து, ஊடகங்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வந்தன. குஜராத் மக்களிடையே அமைதி, ஒற்றுமை உணர்வை அதிகரிக்க 3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மோடி அறிவித்தார்.
கடந்த சில வாரங்களில் மோடியின் உண்ணாவிரதம் குறித்த தகவல்களை ஊடகங்கள் அக்கு வேறாக, ஆணி வேறாக பிரித்து காண்பித்தன. அந்த உண்ணாவிரதம் அரசியல் நோக்கத்துடன் நடத்தப்பட்டதா, யார் யாரெல்லாம் வந்தார்கள் போன்று பல தகவல்களை வெளியிட்டன. ஆனால் மோடியின் சத்பாவனா உண்ணாவிரத்ததின் உண்மையான நோக்கத்தை கண்டுகொள்ள, தெரிவிக்க ஊடகங்கள் தவறிவிட்டன.
மோடி தன் தாயாரிடம் ஆசி வாங்கியதில் இருந்து சாதுக்கள் கையால் பழரசத்தை குடித்து உண்ணாவிரதத்தை முடிக்கும் வரையில் டிவி சேனல்களும், பத்திரிக்கைகளும் சத்பாவனா உண்ணாவிரதத்தைப் பற்றித் தான் பேசின. மோடி ஏதாவது அரசியல் நோக்கத்துடன் உண்ணாவிரதம் இருந்தாரா? அல்லது 2014 தேர்தலை மனதில் வைத்து பாஜக இப்படி செய்கிறதா? போன்ற பல கேள்விகள் எழுப்பிய ஊடகங்கள் அந்த உண்ணாவிரதத்தின் நோக்கத்தை கவனிக்க மறந்துவிட்டன.
தேசிய அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த 5 ஆண்டுகளில் ஒரு முறை கூட மோடி தெரிவிக்கவில்லை. கடந்த 2007-ம் ஆண்டு ஒரு நிருபர் மோடியிடம், 5 ஆண்டுகள் கழித்து நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு அவர், நான் குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்றார். 2012-ம் ஆண்டும் வரப்போகிறது, அவர் கொடுத்த வாக்கை காப்பாற்றியுள்ளார் என்றே கருதலாம். பிரதமர் பதவி, அந்த லட்சியத்தை அடைவது இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
பிரதமர் பதவிக்கு ஏற்றவர் மோடி என்பது தற்போதல்ல கடந்த 2007-ம் ஆண்டு முதலே அனைவருக்கும் தெரியும். அந்த உயரிய பதவிக்கு போட்டியிடத் தேவையான தகுதியுள்ளவர் மோடி என்பதை அனைவரும் உணர வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் குஜராத் படிப்படியாக முன்னேறியுள்ளது என்பதை திட்டக்குழு, அமெரி்க்க காங்கிரஸ், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அம்மாநில மக்கள் அறிவார்கள். மோடி அவர் மாநில மக்களுக்கு செய்து வரும் சேவையைப் பார்த்து ஊடகங்கள் அவரை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக கருதுகின்றன.
பிரதமர் பதவிக்கு தகுதியுடைய மற்ற தலைவர்களை கண்டறிய ஊடகங்கள் தவறிவிட்டன. மோடி தேசிய அரசியலுக்கு வருவதாக எப்போதாவது கூறியதுண்டா என்பதை குறித்து விவாதிக்க வேண்டும்.
சத்பாவனா உண்ணாவிரம் நடந்த அரங்கம் மற்றும் ஏற்பாடுகளைத் தான் மற்றவர்கள் பார்க்கிறார்களே தவிர அதன் உண்மையான நோக்கத்தை பார்க்கத் தவறிவிட்டனர். இந்திய மற்றும் குஜராத் அரசியல் விமர்சகர்கள் மோடியுடன் பைவ்ஸ்டார் அரசியலை தொடர்புபடுத்திப் பார்க்கமாட்டார்கள். மோடியின் பின்னணி, வளர்ப்பு மிகவும் எளிமையானதாகும். அவர் தன் முயற்சியால் அரசியலில் பெரிய இடத்திற்கு வந்துள்ளார். அவர் ஒன்றும் பெரிய, பெரிய கல்வி நிலையங்களில் படிக்கவில்லை. அவர் சகாக்களை ஒப்பிடுகையில் அவருக்கு இந்திய மொழிகள் அத்துப்படி.
இந்த நாட்டை ஆட்சி செய்யப் பிறந்தவர் பாராசூட்டில் வந்ததால் டெல்லி குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை பார்க்க அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அது பைவ்ஸ்டார் தகுதியைத் தாண்டியதல்லவா? ஆம், உண்ணாவிரதத்தின்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் அவை எதற்கென்று தெரியுமா? தங்கள் முதல்வரைப் பார்க்க குவிந்த மக்களுக்காகத் தான் அந்த ஏற்பாடுகள்.
(தொடரும்)












Click it and Unblock the Notifications