Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாச்சாத்தி வழக்கு-10 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட 17 பேர் சிறையில் அடைப்பு

Subscribe to Oneindia Tamil

Vachathi Villagers
தர்மபுரி: வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில் 7 முதல் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட 17 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு 1992ம் ஆண்டு வாச்சாத்தி கிராமத்தில் புகுந்த வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் அடங்கிய 269 பேர் கொண்ட குழு பாலியல் வன்முறையில் இறங்கி 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது. சொத்துக்களையும் சூறையாடி அட்டூழியம் செய்தனர்.

இந்த வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் உயிருடன் உள்ள 215 பேர் உள்பட 269 பேருமே குற்றவாளிகள் என நீதிபதி குமரகுரு தீர்ப்பளித்தார்.

பின்னர் உயிருடன் உள்ள 215 பேருக்கும் தண்டனை விவரத்தையும் அவர் அறிவித்தார். தண்டனை பெற்றவர்களில், 126 பேர் வனத்துறையையும், 84 பேர் போலீஸ் துறையையும், 5 பேர் வருவாய் துறையையும் சேர்ந்தவர்கள்.

இவர்களில் அருணாச்சலம், ஆறுமுகம், ராஜகோபால், ராஜமாணிக்கம், கோவிந்தன், ரத்தினவேலு, வேடியப்பன், சிதம்பரம், எம்.பெருமாள், அழகிரி, காளியப்பன், ஜானகிராமன் ஆகிய 12 பேருக்கு கற்பழிப்பு மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ்மக்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராததொகையை கட்டத்தவறினால் கூடுதலாக 9 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

பெரியநாயகம், பச்சியப்பன், பெருமாள், பழனி, மாதையன் ஆகிய 5 பேருக்கு வன்கொடுமை சட்டத்தின்படி 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் அபராதத் தொகையில் இருந்து தலா ரூ.15 ஆயிரம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என்றும், 15 ஆண்டுகளாக வழக்கை நடத்தி வந்த சி.பி.ஐ.க்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

7 முதல் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட 17 பேரும் உடனடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்கள் தவிர இந்த வழக்கில் மற்ற 198 பேருக்கும் வன்கொடுமை, சாட்சியங்களை மறைத்தல், கலகம் விளைவித்தல், குற்றத்தின் சாட்சிகளை மறைத்தல், குற்றத்தை பற்றி தவறான தகவல் அளித்தல் உள்பட 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் தலா ரூ.1000 முதல் ரூ.2000 வரை அபராதமும் விதிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+