2 ஜி வழக்கில் உண்மைகளை மறைக்கும் வேலை நடக்கிறது! - பழ நெடுமாறன்

உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "மத்திய நிதி அமைச்சகம், பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றி ப.சிதம்பரத்திற்கு தெரிந்து தான் அனைத்தும் நடந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதை தீர விசாரித்து மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும்.
ஆனால், 'எனக்கு ப.சிதம்பரம் மீது நம்பிக்கை இருக்கிறது' என்று பிரதமர் கூறி இருப்பதில் இருந்து இப்பிரச்சினையை திசை திருப்ப முயற்சி நடக்கிறது.
பிரதமருக்கு ப.சிதம்பரம் மீது நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? என்பது பிரச்சினை அல்ல. ப.சிதம்பரத்திற்கு இந்த ஊழலில் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பது தான் பிரச்சினை.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரத்திற்கும், அவருடைய மேல் இடத்திற்கும் உள்ள தொடர்புகளை மறைக்க முயற்சி நடக்கிறது. இது பற்றிய பிரச்சினை முடியும் வரை ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும்.
வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ள நஷ்டஈடு மிகவும் குறைவாக உள்ளது. அவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்.
முல்லை பெரியாறில் புதிய அணைகட்ட ரூ. 663 கோடி மதிப்பில் திட்ட அறிக்கையை கேரள அரசு தயாரித்துள்ளது. இதை உச்சநீதி மன்றம் அமைத்த உயர்மட்டக்குழுவிடம் சமர்ப்பிக்க முயற்சி செய்கிறது. இது குழுவின் ஆய்வை திசைதிருப்பும் முயற்சி.
முல்லை பெரியாறில் உள்ள அணையின் பலம் பற்றி ஆய்வு செய்வதே அந்த குழுவிற்கு அளிக்கப்பட்ட பணி. எனவே கேரள அரசின் திட்ட அறிக்கையை உயர்மட்டக்குழு ஏற்க கூடாது. இதை தமிழக அரசு குழுவிடம் வலியுறுத்த வேண்டும்," என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications