உள்ளாட்சி தேர்தல் எதிரொலி- நெல்லையில் திருமண கறிவிருந்துக்கு தடை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு பண விநியோகம், இலவச பொருட்கள் வழங்கல், கறிவிருந்து தடை செய்ய தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார், ஒரு வீடியோகிராபர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பறக்கும் படையினர் நெல்லை, மேலப்பாளையம் மண்டல பகுதிகளிலும், தச்சநல்லூர், பாளை., மண்டல பகுதிகளிலும் சோதனையில் ஈடுபடுவர். மண்டபங்களில் கறிவிருந்துக்கு தடைதிருமண மண்டபங்கள் மற்றும் வீடுகளில் கூட்டங்களை திரட்டி மது கொண்டாட்டம், கறிவிருந்து நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமண வரவேற்பு, சடங்கு, ஓய்வு பெறுதல் பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளுக்கு போலீசாரிடம் முன் அனுமதி பெற வேண்டும். பறக்கும் படை சோதனை தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் நெல்லை எஸ்.என்.ஹைரோட்டில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் 18004257401 என்ற நம்பரில் தொடர்பு கொண்டு புகார்களை கூறலாம் என தெரிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+