சத்தியமூர்த்தி பவனில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் டிஸ்மிஸ்- தங்கபாலு அறிவிப்பு
சென்னை: வேட்பாளர் மாற்றம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில், காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைந்து சூறையாடலில்
ஈடுபட்டவர்களை கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்வதாக மாநிலத் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி 114 வார்டு கவுன்சிலர் பதவிக்கு முருகவேல் என்பவர் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படிருந்தார். இந்நிலையில் வேட்புமனி வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளான திங்கள்கிழமையன்று அன்பழகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய முருகவேல் ஆதரவாளர்கள் நாற்காலி, கதவு, ஜன்னல்கள், கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். தங்கபாலுவின் உருவப் படத்தையும் உடைத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட அப்பாஸ், ரியான் பஷீர், முருகவேல் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக தங்கபாலு கூறியுள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி கண்ட படு தோல்விக்குப் பொறுப்பேற்பதாக கூறி தலைவர் பதவியை ராஜினாமா செய்து கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்தார் தங்கபாலு. அது ஏற்கப்பட்டதா, இல்லையா என்பதே இன்னும் தெரியவில்லை. இதனால் அவரும் தலைவர் பதவியில் நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் பலரை தொடர்ந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவுகளை பறக்க விட்டு வருவது காங்கிரஸ் எதிர்த் தரப்பினரை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications