ஜாமீன் தரப்பட்ட கே.என். நேரு மீது மேலும் ஒரு புதிய வழக்கு- விடுதலையில் சிக்கல்
திருச்சி: மதுரை உயர்நீதிமன்றக் கிளையால் ஜாமீன் அளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வேறு ஒரு நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் சிறையிலிருந்து வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொட்டப்பட்டு நில அபகரிப்பு வழக்க உள்ளிட்டவற்றில் நேருவுக்கு நேற்றுதான் மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஜாமீன் அளித்தது. இந்த நிலையில், திருச்சி போலீஸார் புதிய வழக்கில் நேருவைக் கைது செய்துள்ளனர்.
அக்டோபர் 2ம் தேதி நெரோன் மோரைஸ் என்பவர் திருச்சி குற்றப் பிரிவு போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், நேரு, அவரது தம்பி ராமஜெயம் மற்றும் துணை மேயர் அன்பழகன் உள்ளிட்ட 10 பேர் தன்னை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை தங்களிடம் கொடுக்குமாறும் அவர்கள் மிரட்டினர். தர மறுத்தால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர்கள் மிரட்டியதாகவும் கூறியிருந்தார். இந்தப் புகாரின்பேரில் தற்போது நேருவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே ராமஜெயம், அன்பழகன் ஆகயோர் கைது செய்யப்பட்டு விட்டனர். நேற்று நேரு கைதானார். வினோத் என்பவர் தலைமறைவாக உள்ளார். நேருவை 7ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளனர் போலீஸார்.
இதனால் நேருவை சிறையிலிருந்து விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications