பேரறிவாளன், முருகன், சாந்தனை தூக்கிலிருந்து விடுவியுங்கள்- பிரதமர், சோனியாவுக்கு கருணாநிதி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூக்குக் கயிற்றின் கீழ் நிற்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை மன்னித்து அவர்களு தூக்குக் கயிற்றிலிருந்து விடுவிக்க உதவ வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்களுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, இருபதாண்டு காலத்திற்கு மேலாக சிறையிலே வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டும் என்றும், அதற்காக தமிழக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநனருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அனைவரும் கேட்டுக்கொண்டு பல நாட்களாகியும்,

தமிழக அரசு அதற்கு முன் வராத நிலையில், மத்திய அரசாவது இவர்கள் மூவரையும் சிறையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு உதவிட வேண்டும் என்று பிரதமரையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டும் தலைவி சோனியா காந்தியையும் தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+