உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணி: வெளிமாநில போலீசார் வருகை
நெல்லை: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 11,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 2,000 என்சிசி மாணவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் டிஐஜி வரதராஜுலு உத்தரவின் பேரில் நெல்லை எஸ்.பி. விஜயேந்திர பிதாரி, தூத்துக்குடி எஸ்.பி. நரேந்திர நாயர், கன்னியாகுமரி எஸ்.பி. பாலசுப்பிரமணியன், நெல்லை மாநகரம் துணை கமிஷனர்கள் மாஸ்டர்லியோ, ஜெயபாலன் ஆகியோர் தலைமையில் 11,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் 3,000 போலீசாரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2,000 போலீசாரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,000 போலீசாரும், நெல்லை மாநகரத்தில் 2,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இவர்களோடு தமிழக சிறப்பு போலீசான மணிமுத்தாறு பட்டாலியன் ஆண்கள் பிரிவான 9வது பட்டாலியன் மற்றும் பெண்கள் பிரிவான 12வது பட்டாலியனில் இருந்து 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
மேலும் கூடுதல் பாதுகாப்பு பணியில் கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த சிறப்பு படை போலீசார் 500 பேரும், அதிரடிப் படை போலீசார் 400 பேரும், கமான்டோ படையினர் 2,000 பேரும், இவர்களுடன் முன்னாள் ராணுவத்தினர், போலீசார், என்சிசி மாணவர்களும் பாதுகாப்பு பணியி்ல் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலுள்ள 12 நிரந்தர சோதனைச் சாவடிகளை தவிர தற்போது புதிதாக 21 சோதனைச் சாவடிகள் துவங்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications