மனைவி நளினிக்கு 'ஏ' வகுப்பு கேட்டு முருகன் உண்ணாவிரத எச்சரிக்கை: அதிகாரிகள் சமாதானம்
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் இருக்கும் நளினி்க்கு சகல வசதிகளுடன் கூடிய ஏ வகுப்பு அறை கொடுக்க வேண்டும் என்று அவரது கணவர் முருகன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்ததாகவும், அவரை சிறை அதிகாரிகள் சமாதானப்படுத்தியதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரும் தற்போது வேலூர் மத்திய சிறையில் உள்ளனர். இதே வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகனின் மனைவி நளினியும் அதே வேலூர் சிறையில் தான் உள்ளார்.
முதலில் வேலூர் சிறையில் இருந்த நளினியை பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை புழலுக்கு மாற்றினார்கள். பின்னர் கணவர் இருக்கும் சிறைக்கு தன்னை மாற்றுமாறு நளினி கோரிக்கை விடுத்ததின்பேரில் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். மீண்டும் வேலூர் சிறைக்குள் வந்தவுடன் நளினி கதறி அழுததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கணவனும், மனைவியும் 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்துப் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு நளினியை சந்தித்த முருகன் 9 மணி வரை அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது தனக்கு 'ஏ' வகுப்பு கொடுக்கவில்லை என்றும், தான் இருக்கும் அறையில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்றும் நளினி முருகனிடம் தெரிவித்துள்ளார். இதையடு்தது தனது மனைவி நளினிக்கு 'ஏ' வகுப்பு அறை கேட்டு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முருகன் தெரிவித்தார் என்றும், உடனே அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தினார்கள் என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications