தமிழகத்தை சீரழித்த திராவிட கட்சிகளை ஒழிக்கவே பாமக தனித்துப் போட்டி: ராமதாஸ்

உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடும், பாமக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம், ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தில் நடந்தது.
இக் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், தமிழகத்தை கடந்த 44 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகள், மாநிலத்தை சின்னாபின்னமாக்கி விட்டன. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தில் இருந்த வறுமையை மாற்ற முடியவில்லை.
முதலில் மக்களின் வறுமையை ஒழிப்போம் என கூறியவர்கள், தற்போது வறுமைக்கான அளவுக்கோல் என்ன என தெரியவில்லை என்கின்றனர். இந்த உள்ளாட்சி தேர்தல், தற்போது உள்ள ஊழல் கட்சிகளுக்கும், நேர்மையான பாமகவுக்கும் இடையேயான போட்டியாக கொள்ளலாம்.
திராவிடக் கட்சிகளின் அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டு வரவே பாமக தனித்து போட்டியிடுகிறது. இனி திராவிட கட்சிகளுடன் எந்த நிலையிலும் கூட்டணி அமைக்கப்படாது. திராவிட கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்குவதே, பாமகவின் வருங்காலத் திட்டம்.
தமிழகத்தை சீரழித்த திராவிட கட்சிகளை ஒழிக்கவே பாமக தனித்துப் போட்டியிடுகிறது.
திராவிட கட்சிகளின் கொள்ளையே, கொள்ளையடிப்பது தான். மதுவை கொடுத்து மாநிலத்தையே சீரழித்துவிட்டனர். இலவசங்களை கொடுத்து சுயமரியாதையை கெடுத்துவிட்டனர். மக்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர் வழங்குவதால், நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டு விடாது.
நாட்டில் தரமான கல்வியும், இலவச மருத்துவமும் தான் தேவை என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தை சீரழித்த திராவிடக் கட்சிகளுக்கு, நீதிமன்றம் மூலம் தண்டனை அளிக்க முடியாது. ஆனால் மக்கள் மன்றத்தால் தண்டனை அளிக்க முடியும், என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications