அத்வானிக்கும், எனக்கும் இடையே எந்த பிரச்சனையுமில்லை- எல்லாம் வதந்தி: மோடி
காந்திநகர்: எனக்கும், பாஜக மூத்த தலைவர் அதிவானிக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை. எங்களைப் பற்றி தவறான கருத்துகள் பரப்பப்படுவது கண்டனத்திற்குரியது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி ஊழலுக்கு எதிரான ரத யாத்திரையை இன்று தொடங்குகிறார். பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அத்வானியும், நரேந்திர மோடியும் ஆர்வம் காட்டுகின்றனர். அதை அவர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்காவிட்டாலும் மக்களின் கவனத்தை ஈர்க்க அவ்வப்போது ஏதாவது செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அத்வானி பீகார் மாநில முதல்வர் நித்தீஷ் குமாருடன் கைகோர்த்துள்ளார். அவர்கள் ஓரணியாக இருந்து செயல்படுகிறார்கள்.
இதனால் அவர்களுக்குள் பனிப்போர் நடப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது உண்மை என்று நிரூபிக்கும் வகையில் கடந்த மாதம் டெல்லியில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் மோடி பங்கேற்கவில்லை. இதனால் அத்வானி, மோடி இடையே உள்ள பிரச்சனை பெரிதாகிவிட்டது என்று ஊடகங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் தான் அத்வானி ரத யாத்திரையை இன்று துவங்குகிறார். இத்தனை நாட்கள் அமைதி காத்த மோடி இறுதியாக நேற்று தனது பிளாக்கில் இந்த விவகாரம் குறித்து எழுதியுள்ளார்.
அதில் அவர் எழுதியிருப்பதாவது,
மதிப்பிற்குரிய அத்வானிஜியுடன் சேர்ந்து பணி புரியும் கௌரவத்தைப் பெற்றவன் நான். ஆனால் எனக்கும், அவருக்கும் இடையே பிரச்சனை நடந்து வருகிறது என்று சிலர் வதந்தியைப் பரப்புவது துரதிஷ்டவசமானது, கண்டனத்தி்ற்குரியது.
அத்வானி ஊழலுக்கு எதிராக ரதய யாத்திரை மேற்கொள்கிறார். அது மகத்தானது. அவர் ஊழல் மற்று கருப்பு பணத்தை எதிர்த்து தான் ஜன் சேத்னா யாத்திரை மேற்கொள்கிறார். இதற்கு மக்கள் மாபெரும் வரவேற்பு அளித்து வெற்றி பெறச் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன் என்று அதில் எழுதியுள்ளார்.
இது தவிர அத்வானி பற்றியும், அவரது யாத்திரை பற்றியும் ஆஹா, ஓஹோ என்று மோடி புகழ்ந்து தள்ளியுள்ளார்.












Click it and Unblock the Notifications