பெண் குழந்தைக்கு பிரேமலதா பெயரை சூட்டிய விஜயகாந்த்!

காஞ்சீபுரம் நகரமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சி. ஏகாம்பரம் மற்றும் 51 வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக கட்சித் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் நேற்று காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகே பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் தான் மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. அவர்கள் கோடிக்கணக்கான வரிப்பணத்தை வீணாக்குகின்றனர்.
உள்ளாட்சிப் பணிகளை செய்து முடிக்க ஆட்சியாளர்கள் லஞ்சம் வாங்குகின்றனர். எங்கு பார்த்தாலும் ஒரே ஊழல் மயமாக உள்ளது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் எங்கள் மீது நம்பிக்கை வைத்து முரசு சின்னத்தில் வாக்களித்து எங்களை வெற்றி பெறச் செய்யுங்கள்.
நாங்கள் வெற்றி பெற்றால் தமிழகத்தையே மாற்றிக் காட்டுவோம். மாற்றம் தரும் மக்களை ஏற்றம் பெறச்செய்வோம். எங்கள் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் இதே பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த பகுதியைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள்.
அவர்கள் தவறு செய்தால் நான் நிச்சயம் தட்டிக்கேட்பேன். அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யும் மக்களாகிய நீங்களே அவர்களை தண்டிக்கலாம். தவறு செய்தது ஆண்டவனாக இருந்தாலும் தட்டிக் கேட்போம். எனவே, வரும் உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். கற்கால ஆட்சியை மாற்றி பொற்கால ஆட்சியைத் தருவோம் என்றார்.
பெண் குழந்தைக்கு பிரேமலதா பெயரை சூட்டிய விஜயகாந்த்!:
இந் நிலையில் திருச்சி மாநகராட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.
உறையூர் பகுதியில் நாச்சியார் கோவிலில் பிரச்சாரம் மேற்கோண்டபோது தேமுதிக தொண்டர் ஒருவர், தனது பெண் குழந்தைகயை விஜயகாந்திடம் கொடுத்து பெயர் சூட்டச் சொன்னார்.
குழந்தையை வாங்கிய விஜயகாந்த், உடனே 'பிரேமலதா' என்று தனது மனைவியின் பெயரை சூட்டினார்.












Click it and Unblock the Notifications