இயற்கை உபாதைக்கு ஒதுங்கிய பெண்களை ஒளிந்திருந்து பார்த்தவருக்கு தர்ம அடி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: பெண்கள் அதிகாலையில் இயற்கை உபாதைக்காக ஒதுங்குவதை ஒளிந்திருந்து பார்த்து ரசித்த நபரை அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடியில் கேவிகே நகர் பகுதியில், பக்கீல் ஓடை என்ற இடம் உள்ளது. இங்கு அதிகாலையில் பெண்கள் இயற்கை உபாதைகளுக்காக வருவது வழக்கம். இதைப் பார்த்த ஒரு நபர் அந்தப் பகுதியில் ஒளிந்திருந்தபடி பெண்கள் இயற்கை உபாதையை கழிப்பதை உட்கார்ந்து வேடிக்கை பார்த்திருக்கிறார்.

அந்த நபரைப் பார்த்து விட்ட பெண்கள் கத்தி கூச்சல் போட்டு ஊரைக் கூட்டினர். பெண்கள் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் அந்த நபரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை போலீஸில் ஒப்படைத்தனர்.

விசாரித்தபோது அந்த நபரின் பெயர் முத்து என்றும், தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் என்றும் கூலி வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+