உள்ளாட்சித் தேர்தல்: நெல்லையில் பூத்சிலிப் வழங்கும் பணி துவக்கம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 19.92 லட்சம் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக பூத் சிலிப்கள் வழங்கும் பணி துவங்கியது.
தமிழகத்தில் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
ஊரக உள்ளாட்சிகளில் ஓட்டுப் பெட்டிகள் மூலமும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமும் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளான கிராம பஞ்சாயத்து, பஞ்சாயத்து, யூனியன் வார்டு, மாவட்ட பஞ்சாயத்துகளில் மொத்தம் 5 லட்சத்து 30 ஆயிரத்து 613 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 30 ஆயிரத்து 884 பெண் வாக்காளர்கள் உட்பட மொதத்ம் 10 லட்சத்து 61 ஆயிரத்து 497 பேர் உள்ளனர்.
டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 337 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 88 ஆயிரத்து 8 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 3 லட்சத்து 76 ஆயிரத்து 346 பேரும், நகராட்சிகளில் 99 ஆயிரத்து 661 ஆண் வாக்காளர்கள், 98 ஆயிரத்து 537 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 1 லட்சத்து 98 ஆயிரத்து 198 பேரும், 3ம் நிலை நகராட்சிகளில் 30 ஆயிரத்து 97 ஆண் வாக்காளர்கள், 30 ஆயிரத்து 153 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 60 ஆயிரத்து 250 பேரும் உள்ளனர்.
நெல்லை மாநகராட்சியை பொறுத்தவரை நெல்லை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 19 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 48 ஆயிரத்து 139 பெண் வாக்காளர்கள் உட்பட 2 லட்சத்து 96 ஆயிரத்து 166 பேர் உள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக பூத் சிலிப்கள் வழங்கும் பணி நேற்று துவங்கியது.
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் மொத்தம் 9 லட்சத்து 96 ஆயிரத்து 727 ஆண் வாக்காளர்கள், 9 லட்சத்து 95 ஆயிரத்து 721 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 19 லட்சத்து 92 ஆயிரத்து 457 வாக்காளர்களுக்கு வீடு, வீடாக பூத் சிலிப்கள் வழங்கும் பணி ஆரம்பமானது. வாக்குப்பதிவு நாளன்றும் வாக்குச் சாவடிகளுக்கு அருகில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப்கள் வழங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications