For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரெய்டைத் தொடர்ந்து கலாநிதி, தயாநிதி மாறனிடம் விரைவில் சிபிஐ விசாரணை

Google Oneindia Tamil News

டெல்லி: பல மாத இழுபறிக்குப் பின்னர் சமீபத்தில் நடத்திய 'அதிரடி' ரெய்டுகளைத் தொடர்ந்து விரைவில் கலாநிதி மற்றும் தயாநிதி மாறனிடம் சிபிஐ தனது விசாரணையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேக்சிஸ்-ஏர்செல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மிக நீண்ட கால தாமதத்திற்குப் பின்னர் சமீபத்தில் ரெய்டையும் அரங்கேற்றினர். இதையடுத்து இருவரிடமும் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது. இதற்கான சம்மன் விரைவில் அனுப்பபடும் என்று தெரிகிறது.

மாறன் சகோதரர்கள் தவிர மேக்ஸிஸ் நிறுவனத் தலைவர் அனந்தகிருஷ்ணன், அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க்ஸ் நிறுவன இயக்குநர் ரால்ப் மார்ஷல் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்படவுள்ளது. மொத்தம் 8 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதில் மாறன் சகோதரர்கள் மற்றும் மார்ஷலிடம் ஒருமுறை விசாரணை நடந்துள்ளது. அனந்தகிருஷ்ணன்தான் இதில் முக்கியமானவர். அவரிடம் இதுவரை விசாரணை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After a belated raids, CBI is now getting ready to grill Maran brothers in Aircel-Maxis deal in 2g scam case. CBI will issue the summons to all 8 accused in the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X