அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி- நடன ஆசிரியை சென்னையில் கைது
சென்னை: தமிழகம் முழுவதும் பல இடங்களில் பணமோசடியில் ஈடுபட்ட நடனபள்ளி ஆசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி புவனேஸ்வரி (42). குடும்ப தகராறு காரணமாக, கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்ற புவனேஸ்வரி, சென்னையில் நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். சென்னையில் தங்கியிருந்த போது, அக்கம் பக்கத்தினர் மற்றும் அறிமுகமானவர்களிடம் பணம் வசூலித்தார்.
இதில் சிலரிடம் தனக்கு பல அரசு அதிகாரிகளை தெரியும் என்பதால், குறுக்கு வழியில் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் வசூலித்துள்ளார். வேறு சிலரிடம், தனக்கு பல முக்கிய வங்கி அதிகாரிகளை தெரியும் என்பதால், வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்தார். இதுபோல பலரிடமும் லட்சக்கணக்கில் பணம் வசூலித்த புவனேஸ்வரி, திடீரென மாயமானார்.
இந்நிலையில் புவனேஸ்வரிடம் அதிகளவில் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரை சேர்ந்த பாலமுருகன், தொடர்ந்து தேடி வந்தார். ஆனால் புவனேஸ்வரி தனது மொபைல்போன் எண்ணையும், தங்கிருந்த இடத்தையும் மாற்றியதால் பாலமுருகனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் புவனேஸ்வரியில் சென்னையில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து புவனேஸ்வரி மூலம் தான் ஏமாற்றப்பட்டது குறித்து, மைலாப்பூர் போலீசாரிடம் பாலமுருகன் புகார் அளித்தார்.
அந்த புகாரில், புவனேஸ்வரியை கைது செய்த மைலாப்பூர் போலீசார் விசாரித்தனர். இதில், புவனேஸ்வரி, தமிழகத்தின் பல பகுதிகளில் இதுபோன்ற பணமோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. புவனேஸ்வரி மூலம் ஏமாற்றப்பட்ட நபர்கள் மற்றும் தொகை குறி்த்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications