விருதுநகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை தடுத்த அ.தி.மு.க. வேட்பாளரை உதைத்த திமுகவினர்
விருதுநகர்: விருதுநகர் ரோசல்பட்டியில் வாக்காளர்களுக்கு பண கொடுத்ததை தடுத்த அ.தி.மு.க. ஊராட்சித் தலைவர் வேட்பாளர் பாலகிருஷ்ணனை திமுக-வினர் அடித்து உதைத்தனர்.
விருதுநகர் அருகே ரோசல்பட்டி தி.மு.க. சார்பில் ஊராட்சி தலைவர் பதவிக்கு சேதுராமனும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஹரிகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர். இவருடன், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் மாரிமுத்து, முத்தால் நகரை சேர்ந்த சங்கர், முருகன், கோபால் ஆகியோர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வந்தனர்.
தகவல் அறிந்த அ.தி.மு.க. வேட்பாளர் பாலகிருஷ்ணன் விரைந்து சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன், மாரிமுத்து, சங்கர், முருகன், கோபால் ஆகியோர், பாலகிருஷ்ணனை அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன் விருதுநகர் மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் பாலகிருஷ்ணனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருதுநகர் பாண்டியன் நகர் மெயின் ரோட்டில் 100க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டி.எஸ்.பி. ராமூர்த்தி, பாலகிருஷ்ணனை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications