காங்கிரசை சீண்டினால் சும்மா இருக்க மாட்டேன்: ஈ.வி.கே.எஸ் .இளங்கோவன் எச்சரிப்பு
விருதுநகர்: தி.மு.க-வினர் காங்கிரஸ் கட்சியினரை சீண்டினால் சும்மா இருக்கமாட்டேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் நகர்மன்ற தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்திகா கரிக்கோல்ராஜ் போட்டியிடுகின்றார். அவரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியதாவது, விருதுநகர் நகராட்சி தலைவராக இருந்த கார்த்திகா கரிக்கோல்ராஜ் இங்குள்ள தி.மு.க. அமைச்சரிடம் சிறைப் பறவையாக இருந்தார்.
இதனால், நகராட்சி நலத்திட்ட பணிகளை முன்னாள் அமைச்சரும், அவரது தம்பியும் தான் செய்து வந்தனர். ஆனால், அப்பணிகள் முறையாக செய்யப்படவில்லை. இங்குள்ள முன்னாள் அமைச்சருக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இனிமேல் தி.மு.க.வினர் காங்கிரஸ் கட்சியினரை சீண்டினால் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டேன்.
இப்போது நான் அமைச்சர் இல்லை என்றாலும் மத்திய அமைச்சர்களிடம் எனக்கு செல்வாக்கு இருக்கிறது. அதன் மூலம் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு வலியுறுத்துவேன். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும். அதற்கு பொதுமக்கள் அனைவரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும், என்றார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications