ஓட்டுக் கேட்ட போன வேட்பாளர் மலைப் பாம்பைப் பிடித்தார்-குளச்சலில் ஒரு திரில் பிரசாரம்
குளச்சல்: நெட்டாங்கோட்டில் வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டு சென்ற வேட்பாளருக்கு மலைப்பாம்பைப் பிடிக்கும் வேலை கிடைத்தது. அவரும் தயங்காமல் தனது ஆதரவாளர்களோடு சேர்ந்து பாம்பைப் பிடித்து ஏரியா மக்களிடம் பாராட்டைப் பெற்றார்.
இது குறித்த ருசிகரமான தகவல் இதோ, கன்னியாகுமரி நெட்டாங்கோடு கிராம பஞ்சாயத்தில் ஒன்றாவது வார்டு வேட்பாளராக போட்டியிடுபவர் ஐயப்பன். இவர் நெட்டாங்கோடு அக்கராமணம் குளக்கரை பகுதியில் அமைத்துள்ள வீடுகளில் மாலை நேரத்தில் வாக்கு கேட்டு தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.
அப்போது, அப்பகுதியில் ஒன்பது அடி நீளமுள்ள மலைபாம்பு ஒன்று வளைந்து நெளிந்து சென்றுள்ளது. அதை பார்த்த வேட்பாளர் ஆதரவாளர்கள் சத்தம் போட, உஷாரான வேட்பாளர் ஐயப்பன் உடனே தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அந்த மலைப்பாம்பை மடக்கி பிடித்தார். ஆனால் அதற்குள் பலர் 'எஸ்கேப்' ஆகி இருந்தனர்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து அந்த மலைப்பாம்பை பிடித்து சென்று காட்டில் விட்டனர். பொது மக்களிடம் வாக்கு கேட்டு சென்ற வேட்பாளருக்கு வாக்கு-வுடன் சேர்த்து பாம்பும் கிடைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications