சென்னை வக்கீல் மகன் கொலை வழக்கை சிபிஐ கூடுதல் இயக்குநர் விசாரிக்க அதிரடி உத்தரவு!
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் வக்கீல் சதீஷ் குமார் கொலை வழக்கை சிபிஐ கூடுதல் இயக்குநர் சலீம் அலி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வக்கீல் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார். இவரும் ஒரு வக்கீல். இவர் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். போலீஸாரின் தீவிர வேட்டையில் அவரது உடலை போரூர் ஏரியிலிருந்து மீட்டனர்.
அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. பின்னர் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார்தான் தனது மகனைக் கொலை செய்துள்ளதாக சங்கரசுப்பு குற்றம் சாட்டினார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சங்கரசுப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால் சிபிஐ விசாரணை முறையாக நடக்கவில்லை. தான் குறிப்பிட்ட சில போலீஸாரிடம் சிபிஐ முறையாக விசாரிக்கவில்லை.வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று சங்கரசுப்பு உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதையடுத்து சிபிஐ இயக்குநர் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது சதீஷ்குமார் வழக்கை திரிபுரா சிபிஐ கூடுதல் இயக்குநர் சலீம் அலி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் சங்கரசுப்பு மகன் கொலை வழக்கில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications