இந்தியாவுக்கு வர்த்தகரீதியில் மிகுந்த நட்பு நாடு அந்தஸ்தை விரைவில் தருவோம்-ஹீனா

பாகிஸ்தான் நாட்டு நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தி்ல அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துவங்கியுள்ளது. இந்தியாவுடனான பேச்சுவார்த்தை எந்தவிதத்திலும் தடைபடாமல் நடக்க வேண்டும். அப்பொழுது தான் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். இந்தியாவுடனான உறவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வர்த்தகத்தில் நாம் சாதனை படைத்துள்ளோம்.
நியூயார்க்கில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கொடுத்த வரவேற்பு விருந்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொண்டது வரலாற்றிலேயேமுதன்முறையாகும்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்தியா-பாகிஸ்தான் தலைவர்கள் காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இருநாடுகளின் வெளியுறவுத் துறை செயலாளர்களும் இது குறி்த்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நான் இந்தியாவுக்கு சென்றபோது நடந்த அமைச்சர்கள் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் பேசினேன்.
வர்த்தக ரீதியில் மிகுந்த நட்பு நாடு என்ற அந்தஸ்தை விரைவில் இந்தியாவுக்கு அளிப்போம். இதன் மூலம் இரு நாட்டு வர்த்தகம் உள்ளிட்டவை அதிகரிக்கும் என்றார்.
ஆனால் எப்பொழுது இந்த அறிவிப்பு வெளியாகும் என்று அவர் கூறவில்லை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications