புதுவை இடைத் தேர்தலில் அமோக வாக்குப் பதிவு-82 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின
புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி இடைத்தேர்தலில் மிக மிக விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. வாக்குப் பதிவின் இறுதியில் 82 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி இந்திரா நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ரங்கசாமி இன்னொரு தொகுதியிலும் வெற்றி பெற்றதால், இந்திரா நகரிலிருந்து ராஜினாமா செய்தார். இதனால் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
அத்தொகுதியில் தனது என்.ஆர். காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக, அண்ணன் மகன் தமிழ்ச்செல்வனை நிறுத்தியுள்ளார் ரங்கசாமி. காங்கிரஸ் சார்பில் ஏ.கே.டி. ஆறுமுகம், அதிமுக சார்பில் பாஸ்கரன் உள்பட 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்தத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 29,005 ஆகும். இவர்களுக்காக 13 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. அதில் 6 சாவடிகள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டது.
காலையில் அங்கு சாரல் மழை பெய்ததால் வாக்குப் பதிவு ஆரம்பமே மந்தமாக இருந்தது. இருப்பினும் மழை நின்றதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு விறுவிறுப்படைந்தது.
இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் நடந்த வாக்குப் பதிவில், மாலை 5 ம்ணியளவில் 82 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப் பதிவு இறுதி நிலவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications