வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனைத் தாக்கிய இருவர் கைது
டெல்லி: உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், அன்னா ஹஸாரே குழுவைச் சேர்ந்தவருமான பிரஷாந்த் பூஷனைத் தாக்கிய இருவரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் தாக்குதலுக்குப் பின்னர் தலைமறைவாக இருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தேஜிந்தர் சிங் மற்றும் விஷ்ணு குப்தா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் இன்று காலை கைது செய்த போலீஸார் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
இவர்கள் இருவரும் கோர்ட்டில் சரணடைய முயன்று வந்தனர். ஆனால் அதற்குள் இருவரையும் போலீஸார் பிடித்து விட்டனர். நேற்று டிவி ஒன்றுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்த பூஷனை திடீரென உள்ளே புகுந்த 3 பேர் சரமாரியாக தாக்கினர். தாக்குதலை தடுக்க முயன்ற டிவி நிருபரையும் அவர்கள் தாக்கினர். தாக்குதலில் நிலை குலைந்தார் பூஷன். அவரது சட்டை கிழிந்து போய் விட்டது.
தாக்குதலில் ஈடுபட்ட மூவரையும் பிடிக்க நடந்த முயற்சியில் மேற்கண்ட இருவரும் தப்பி விட்டனர். இந்தர் வர்மா என்பவர் மட்டும் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் மூவரும் காஷ்மீர் குறித்த பூஷனின் கருத்து தொடர்பாக ஆத்திரமடைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இவர்களிடமிருந்து ஸ்ரீராம் சேனா அமைப்பின் நோட்டீஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications