அணு மின் நிலைய ஊழியர்களை பணிக்குப் போக விடாமல் தடுத்து கூடங்குளத்தில் போராட்டம்
கூடங்குளம்: கூடங்குளம் போராட்டம் தற்போது வேறு பாதையில் திரும்பத் தொடங்கியுள்ளது. இதுவரை அமைதியான முறையில் உண்ணாவிரதம் மட்டுமே மேற்கொண்டு வந்தவர்கள் தற்போது கூடங்குளம் அணு மின் நிலையத்திற்குப் பணிக்குச் செல்லும் ஒப்பந்த தொழிலாளர்களைப் பணிக்குச் செல்ல விடாமல் தடுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இதனால் கூடங்குளத்தில் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி இடிந்தகரையில் சமீபத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டம் பின்னர் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து போராட்டக் குழுவினர் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைப் பார்த்தனர்.
பிரதமருடன் நடந்த சந்திப்புக்குப் பின்னர் இடிந்தகரையில் மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. முதலில் இது ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இது காலவரையற்ற போராட்டமாக அறிவிக்கப்பட்டது. கடந்த 9ம் தேதி முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.
தற்போது இடிந்தகரையில் 25 பெண்கள் உள்பட 106 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது கூடங்குளத்தில்சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் வெடித்துள்ளன. மேலும் அணு மின் நிலையத்திற்கு வேலைக்குப் போகும் ஒப்பந்த ஊழியர்களையும் தடுத்து நிறுத்தி அவர்களது அடையாள அட்டைகளைப் பிடுங்கி வேலைக்குப் போக விடாமல் தடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.
கூடங்குளத்தில் கன்னியாகுமரி-ராமேஸ்வரம் சாலையில் 3 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வேலைக்குச் சென்றவர்கள் வேலைக்குப் போக முடியாமல் திரும்பிச் சென்றனர்.
அணு மின் நிலையித்தில் கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 1000க்கும் மேற்பட்டோர் கூடங்குளம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். நேற்றும், இன்றும் மறியல் போராட்டம் உள்ளிட்டவை நடந்து வருவதால் இவர்களால் வேலைக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஊழியர்களை வழிமறித்து பணிக்குச் செல்ல விடாமல் தடுக்க ஆரம்பித்திருப்பதால் தற்போது கூடங்குளத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விரைவில் கஞ்சித் தொட்டி
இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைப் படகு மீனவர்கள் கடலுக்குப் போய் பல காலமாகி விட்டது. இதனால் கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குப் போகவில்லை. இதனால் மீனவர்களின் நிலைமை மோசமாகி வருகிறது. இதனால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு கஞ்சித் தொட்டி திறப்பது குறித்து கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டக் குழுவினர் யோசித்து வருவதாக தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications