ஜெயலலிதா யார் என்பது விஜயகாந்துக்கு இப்போது புரிந்திருக்கும்: திருமா

ஈரோட்டில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள், அனைத்து இஸ்லாமிய கிறிஸ்தவர் கூட்டமைப்பு வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், 2001ம் ஆண்டில் இருந்து தலித் அமைப்புகளையும், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் அமைப்புகளை ஒருங்கிணைத்து மாற்று அணி ஏற்படுத்த விரும்பினேன்.
2011 சட்டமன்றத் தேர்தல் வரை அது முடியாமல் போனது. ஆனால் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் அந்த விருப்பம் நிறைவேறி உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி, உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டி என முதலிலேயே அறிவித்து விட்டார். ஆனால், அதிமுகவில் கூட்டணிக் கட்சிகளான தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை உடன் வைத்துக் கொண்டே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என வரிசையாக வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா அறிவித்தார்.
இதனால் வேறு வழியில்லாமல் தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேற நேர்ந்தது. இப்போது ஜெயலலிதா யார் என்று விஜயகாந்திற்கு தெரிந்திருக்கும்.
திராவிட கட்சிகள் இதுவரை நமது ஓட்டு வங்கியை பயன்படுத்தி வெற்றிகளை பெற்றனர். நாம் வலிமையாக இருந்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் தனித்து தேர்தலில் நிற்க முடியும்.
கொள்கை அளவில் சிறுபான்மையின மக்களும், தலித்களும் ஒன்றாய் சேர்ந்தால் உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை இங்கும் ஏற்படுத்த முடியும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications