மேலூர் அருகே உடல் ஊனமுற்ற வாலிபரை அடித்து கொலை
மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உடல் ஊனமுற்ற வாலிபர் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்தனர்.
மேலூர் அருகே உள்ள கீழ பதினெட்டாம் குடியை சேர்ந்தவர் வீரன். இவரது மகன் சோனைமுத்து (29). இவர் மாற்றுத்திறனாளி ஆவார். நில புரோக்கராக தொழில் செய்து வருகின்றார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கேசவன், மலைச்சாமி முருகன் ஆகியோருக்கும் இடையே நில விற்பனை குறித்து முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் மூன்று பேரும் சோனைமுத்துவை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சோனைமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கேசவன், மலைச்சாமி, முருகன் ஆகிய மூன்று பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications