காஷ்மீர் குறித்த பிரஷாந்த் பூஷன் கருத்துக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை- அன்னா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காஷ்மீர் கருத்து பொதுக் கருத்தெடுப்பு நடத்த வேண்டும் என்று அன்னா ஹஸாரே குழுவைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறிய கருத்துக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என்று அன்னா ஹஸாரே கூறியுள்ளார்.
பூஷனின் கருத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து டெல்லியில் அவரை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கினர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இதுகுறித்து அன்னா ஹஸாரே கருத்து தெரிவிக்கையில், பூஷனின் கருத்து அவரது சொந்தக் கருத்தாகும். அது எங்களது குழுவின் கருத்தாக எடுத்துக் கொள்ளப்படத் தேவையில்லை.
லோக்பால் மசோதா குறித்து மட்டுமே எனது குழுவினர் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பிரஷாந்த் பூஷன் மீது ஸ்ரீராம் சேனே அமைப்பினர் நடத்திய தாக்குதல் கண்டனத்துக்குரியது என்றார் அன்னா.












Click it and Unblock the Notifications