முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கு இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது
சென்னை: தமிழகம் முழுவதும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் முதல் கட்ட பிரசாரம் முடிவுக்கு வருகிறது.
தமிழகத்தில் அக் 17, 19 ஆகிய இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. முதல் கட்டத் தேர்தலில் 10 மாநகராட்சிகளுக்கும், 60 நகராட்சிகளுக்கும், 259 பேரூராட்சிளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இரண்டாவது கட்டமாக 19ம் தேதியன்று 65 நகராட்சிகளுக்கும், 270 பேரூராட்சிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் எந்த ரூபத்திலும் பிரசாரம் செய்யக் கூடாது.
1 லட்சத்து 32 ஆயிரத்து 467 உள்ளாட்சி பதவிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி தொடங்கியது. மனு பரிசீலனை முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 4 லட்சத்து 11 ஆயிரத்து 767 பேர் தற்போது களத்தில் உள்ளனர்.
இந்தத் தேர்தலில் 4 கோடியே 63 லட்சத்து 37 ஆயிரத்து 397 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த உள்ளனர்.
10 மாநகராட்சி, 60 நகராட்சி, 259 பேரூராட்சி, 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வரும் 17ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியோடு முடிவடைகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications